பள்ளியில் ஆண்டு விழா
இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் நேசனல் அகாடமி மெட்ரிக் பள்ளியில் 18 வது ஆண்டு விழா வெகு விமரிசையா கொண்டாடப்பட்டது நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக S. ராஜதுரை BA.,D.Co.op, (Inspector of police,Uchipuli) கலந்து கொண்டார், பள்ளியின் முதல்வரும் தாளளரும் வரவேற்றுப்பேசினர். மழலையர் மாணவர்களுக்கு நடந்த பட்டமளிப்பு நிகழ்வும், ஆடல்பாடல் நிகழ்ச்சிகளும் என ஆண்டு விழா களைகட்டியது, அதிலும் நம் பாரம்பரியத்தை மீட்கும் நிகழ்வாக கல்வி அரசனின் கனவு என்று மாணவர்களால் நடிக்கப்பட்ட தெருக்கூத்து நிகழ்ச்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது